பெங்களுரு: அதிமுகவில் ஏற்கெனவே பல்வேறு குழப்பங்கள், அணி மோதல்கள் உருவாகியுள்ள நிலையில், கர்நாடகா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க இயலாது என தேர்தல் ஆணையம் கைவிரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப் பட்ட மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்றும் அந்த ஆணையும் சுட்டிக் காட்டி உள்ளது.
மேலும், இரட்டை இலை சின் னம் ஒதுக்கக் கோரி அதிமுக விடமிருந்து, உரிய நேரத்தில் மனு வந்து சேரவில்லை. அது மட்டு மின்றி, கர்நாடகாவில், அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காததற்கு கார ணமாகும்," எனத் தேர்தல் ஆணை யம் தனது விளக்கத்தில் தெரிவித் துள்ளது. கர்நாடகாவில் எதிர்வரும் மே 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர் தல் நடைபெற உள்ளது. இதில், பெங்களூரின் காந்திநகர், ஹனூர், மற்றும் கோலார் மாவட்டம் தங்க வயல் ஆகிய மூன்று தொகுதிக ளில் அதிமுக சார்பில் வேட்பாளர் கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைக்காதது அக்கட்சி வேட்பா ளர்களுக்குப் பின்ன டைவை ஏற்படுத்தி உள்ளது.

