மேலும் இரு மாணவி புகார்: நிர்மலாவுக்கு நெருக்கடி

2 mins read
4f68545f-defa-4484-893e-92b13e55b464
-

விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. அவர் மீது மேலும் இரு மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். தன் கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளைத் தவறான பாதையில் செல்லுமாறு வற்புறுத் திய குற்றச்சாட்டின் பேரில் நிர்மலா தேவி (படம்) கைதாகியுள்ளார். இவ்விவகாரம் குறித்து போலி சார் விசாரணை நடத்திவரும் நிலையில், தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டுள்ளார். அவரிடம் மேலும் இரு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். கடந்த மூன்று தினங்களாக பல்கலைக்கழகத் துணை வேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், சம்பந் தப்பட்ட கல்லூரியின் நிர்வாகிகள், மாணவிகள் எனப் பலரிடம் சந்தானம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த மேலும் இரு மாணவிகள் நிர்மலா தேவி மீது புகார் தெரி வித்து சந்தானத்திடம் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களை மாணவிக ளின் சார்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என் பவர் வழங்கினார். இது தொடர் பாகவும் சந்தானம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் அவர் சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த உள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர் முருகன் ஏற்கெனவே கைதான நிலையில், மற்றொரு பேராசிரியரும் போலிசில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவரை போலிசார் சுற்றி வளைத்த தாக வெளியான தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரின் தூண்டு தல் காரணமாகவே மாணவிகளை உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக நிர்மலா தேவி போலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதற்கு முகாந்திரம் இருப்பதாக போலிசார் கருதுகின்றனர்.