மதுரை: ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் ஒப்புதல் பெறவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். "கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே வழங்கிய அனுமதி முடிந்துவிட்டது. இதனால் சட்டப்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆலை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. "ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும்," என வைகோ தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்: வழக்கு தொடுத்தார் வைகோ
1 mins read

