சினிமா உதவி இயக்குநர் உட்பட 6 பேர் கொள்ளை வழக்கில் கைது

சினிமா உதவி இயக்குநர் உட்பட 6 பேர் கொள்ளை வழக்கில் கைது

1 mins read

சிவகங்கை: வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் சினிமா உதவி இயக்குநர் உட்பட ஆறு பேர் சிவகங்கை போலிசாரிடம் சிக்கி உள்ளனர். கீழப்பூங்குடியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்ததை அடுத்து விக்னேஷ்குமார் (37 வயது) என்ற அந்த ஆடவர் உள்ளிட்ட ஆறு பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையடிக்கும் நேரம், யார் யார் வீட்டுக்குச் செல்வது, வீட்டுக்கு வெளியே நிற்பவரை எவ்வாறு கண்காணிக்க வேண்டும், வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு எவ்வாறு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதை எல்லாம் விக்னேஷ் குமார் மற்றொருவரிடம் நடித்துக் காட்டி கொள்ளையடிக்க உதவி செய்துள்ளார். இக்கும்பலிடம் இருந்து 75 பவுன் தங்க நகைகளும் 10 கிலோ வெள்ளிப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.