மதுரை: கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வற்புறுத்திய நிர்மலா தேவி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய காமராஜர் பல்கலைக்கழக ஆய்வு மாணவரும் தற்காலிக பேராசிரியருமான கருப்பசாமி சரணடைந்துள்ளார். 39 வயதான அவர், நேற்று முன்தினம் மதுரையில் உள்ள நீதி மன்றத்தில் சரணடைந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் பாஸ்கரன், இந்த வழக்கில் கைதாகி உள்ள பேராசிரியர் முருகனும் கருப்பசாமியும் அப்பாவிகள் எனத் தெரிவித்தார். இருவரும் உள்நோக்கத்துடன் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நிர்மலா தேவி விவகாரம்: சரணடைந்தார் ஆய்வு மாணவர் கருப்பசாமி
1 mins read

