வீட்டில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்தது: இரு குழந்தைகள் பரிதாப பலி

வீட்டில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்தது: இரு குழந்தைகள் பரிதாப பலி

1 mins read

சிவகங்கை: வீட்டு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். குடவாசலைச் சேர்ந்த செந்தில்குமார், ஜாகீர் அலி ஆகிய இருவரும் குடும்பத்துடன் ஒரே வீட்டின் மாடியில் அடுத்தடுத்த பகுதிகளில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் செந்தில்குமாரின் இரு குழந்தைகளான பிரதீப் (13 வயது), ஸ்ரீதேவி (8 வயது) ஆகிய இருவரும் ஜாகீர் அலியின் 9 வயது மகனான முகமது பாரூக்கும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பிகள் மீது உரசினர். இதில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் அலற, காப்பாற்ற முயன்ற செந்தில்குமாரின் மனைவி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பிரதீப், முகமது பாரூக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.