சென்னை: முதல்வர் எடப்பாடி பழனி சாமி அரசின் ஊழல்களுக்கு ஆதாரம் இல்லை என தமிழக ஆளுநர் பேட்டி அளித்திருப்பது ஆச்சரியமானது மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டதாக வும் இருக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மக்களாட்சி மாண்புகளுக்கும் மரபுகளுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிராகச் செயல்படுவதாகச் சாடியுள்ளார்.
ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன் மாதிரிகளை ஆளுநர் உருவாக்கி வரு கிறார் என்றும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். "அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் கள் பலரும் வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கைகளுக்கு உள் ளாகி, ஆதாரங்களுடன் அம்பலமாகி அவமானப்பட்டு நிற்பதை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களே முழுமையாக தெரிந்து வைத்துள்ளனர். "இந்நிலையில் ஆட்சியாளர்களை மகிழ்வித்திடும் வகையில் அரசுக்கு 'நற்சான்றிதழ்' வழங்கி ஆளுநர் பேட்டி அளித்திருப்பதும் அந்தப் பேட்டியில் மே மாதம் வரை தன்னுடைய ஆய்வுப் பணியை ஒத்தி வைத்தி ருப்பதாக தெரிவித்திருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன," என்று மு.க.ஸ்டாலின் மேலும் தெரி வித்துள்ளார்.

