ரூ.600 கோடி மோசடி: வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

ரூ.600 கோடி மோசடி: வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

1 mins read

புதுடெல்லி: வெளிநாட்டு நிறு வனங்களுக்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கி, ரூ.600 கோடி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி ஐடிபிஐ, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் உயர் பதவிகளில் இருக்கும் 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏர்செல் நிறுவன உரிமையா ளரான சி.சிவசங்கரனின் சிவா குழுமத்தைச் சேர்ந்த வின்விண்ட் பவர் எனர்ஜி லிமிடெட் நிறு வனத்திற்கு 2010ஆம் ஆண்டில் ரூ.322 கோடியும் ஏக்செல் சன் ஷைன் லிமிடெட் நிறுவனத்திற்கு 2013ல் ரூ.523 கோடியும் கடன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏக்செல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகை யைக் கொண்டு சிவா குழுமத் தைச் சேர்ந்த மற்ற நிறுவனங் களின் கடனை அடைத்ததாகச் சொல்லப்படுகிறது. விதிமுறைகளை மீறி இந்த நிறுவனங்களுக்குக் கடன் வழங் கப்பட்டதாகவும் அது முறையாகத் திருப்பிச் செலுத்தப்படாததால் ஐடிபிஐ வங்கிக்கு ரூ.600 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்ப தாகவும் சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வழக்கில் சில நிறு வனங்கள் உட்பட மேலும் 24 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.