சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக கடந்த 25 ஆண்டு களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இந்நிலையில் 2014ல் இவர் களை விடுதலை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால் இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு செய்தவர்களை முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப் பித்துள்ள அரசாணையின் அடிப் படையில் தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டில் நளினி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்யநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் நளினியின் கோரிக்கையை சட்டப் படி பரீசிலித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய அமர்வு, முன்கூட்டியே நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று கூறி, நளினி தொடர்ந்த மேல் முறையிட்டு மனுவை நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டிய அமர்பு, இதில் தலையிட முடியாது என்றும் தெரிவித்துவிட்டது.

