எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் திடீர் திருப்பம்

எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் திடீர் திருப்பம்

2 mins read
631e2642-7c5a-4d5b-852f-6492b00bd868
-

சென்னை: தமிழக துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா தொடர்ந்த வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக் களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்கள் அர சுக்கு எதிராக வாக்களித்தனர்.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா ஒட்டன்சத்திரம் சக்கர பாணி சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலை யில் நேற்று தீர்ப்பு அளித்தது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதவியில் நீடிக் கலாம் என்று நீதிபதிகள் தீர்ப் பளித்தனர். சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த உத்தரவால் அதிமுக அரசின் தலை தப்பியுள் ளது.

சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் முகாம் மகிழ்ச்சியில் திளைக் கிறது. ஓபிஎஸ்ஸும் பதவி இழப்பிலிருந்து தப்பியுள்ளார். படம்: தமிழக ஊடகம்