கோலாகலமான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம்

கோலாகலமான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம்

1 mins read
eb968c8f-d2c8-457a-bf92-d7ef98399308
-

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி- சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் நேற்றுக்காலை நடைபெற்றது. இதனை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இம்மாதம் 18ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. புதன்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9வது நாளான நேற்று முன்தினம் மரவர்ணச் சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் மாசி வீதிகளில் பக்தர் களுக்குக் காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்றுக் காலை 9.05 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. 11ஆம் நாள் விழாவாக ஞாயிறு மாலை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். படம்: தமிழக ஊடகம்