ஒரு கோடி வேலைகள்

ஒரு கோடி வேலைகள்

2 mins read

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி யின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் வெளியிட்டார். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அம்மாநிலத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார். தங்களது தேர்தல் அறிக்கையை 'மக்களின் குரல்' என வர்ணித்த ராகுல், "மூடப்பட்ட அறைக்குள் நான்கு, ஐந்து பேர் அமர்ந்து தயாரித்த வெறும் ஆவணம் அல்ல," என்றும் குறிப்பிட்டார்.

"கர்நாடக மக்களின் எண்ணங் களைப் பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலை களை உருவாக்குவது போன்ற குறிப்பிட்ட கடப்பாடுகளைக் கொண்டுள்ளோம்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் கூறியுள்ளார். 'புதிய கர்நாடகா' என்ற 'ஹேஷ்டேக்'கையும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியையும் சாடினார். "பிரதமர் மோடி, அவர் மனத் தில் இருப்பதையே மக்களிடம் சொல்வார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையோ கர்நாடக மக்களின் மனங்களில் இருப்பதைக் கொண்டுள்ளது," என்றார் ராகுல்.

மேலும், பாஜகவின் தேர்தல் அறிக்கை கர்நாடக மக்களின் நலன்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்றும் அது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கண்ணோட்டங்களைப் பிரதிபலிக் கிறது என்றும் அவர் சொன்னார். இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரசின் உத்தி களைத் தெரிந்துகொள்வதற்காக அக்கட்சித் தலைவர்களின் தொலை பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக வும் அதற்கு பாஜக தலைவர் அமித் ஷாவே காரணம் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, காங் கிரஸ் தலைவர்களையும் தொண் டர்களையும் மிரட்ட வருமான வரித் துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.