பெங்களூரு: அடுத்த மாதம் 12ஆம் தேதி நடக்கவுள்ள கர்நா டக மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 2,655 பேர் போட்டி யிடுகின்றனர் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கோலார் மாவட்டம், முல்பகல் தொகுதியில் 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதி களில் போட்டியிட விரும்பி 3,509 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களில் 583 பேர் கடைசி நாளில் தங்களது வேட்புமனுக் களைத் திரும்பப் பெற்றனர். போதிய ஆவணங்களை இணைக் காததால் 271 பேரின் மனுக்கள் ரத்து செய்யப்பட்டன. போட்டியிடுவோரில் 219 பேர் பெண்கள். ஆளும் காங்கிரஸ் தரப்பில் இருந்து 222 பேரும் எதிர்க்கட்சியான பாஜக சார்பில் 224 பேரும் சமயச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 201 பேரும் போட்டியிடுகின்றனர். 800 பேர் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; 1,155 பேர் சுயேச்சைகள். வாக்கு எண்ணிக்கை மே 15ஆம் தேதி நடைபெறும்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 2,655 பேர் போட்டி
1 mins read

