ஐநூறு இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய இருவர் கைது

ஐநூறு இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய இருவர் கைது

2 mins read

புதுடெல்லி: இந்திய அரசாங்க இணையத்தளங்களை முடக்கியும் சமூக ஊடகங்கள் வழியாக வெறுப்புணர்வை விதைத்தும் வந்த இரு காஷ்மீர் இளையர்களை டெல்லி சிறப்புப் பிரிவு போலிசார் கைது செய்தனர். கைதான ஷாகித் மல்லா பொறியியல் படிப்பும் அடில் ஹுசைன் கணினி அறிவியல் பட்டமும் பயின்று வருகின்றனர். அவ்விருவரும் 'மூன்றாவது கண்' என்ற தேச விரோத இணையத்தள முடக்கக் குழுவின் அங்கத்தினர் என்றும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய இணையத்தளங்களுக் குள் அவர்கள் ஊடுருவியுள்ளனர் என்றும் போலிசார் தெரிவித்தனர். இந்த 'மூன்றாவது கண்' குழு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் செயல் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஃபைசல் அஃப்சல், அமீர் முசாஃபர் என்ற இரு பாகிஸ்தானியர், மல்லா உடனும் ஹுசைனுடனும் தொடர் பில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அஃப்சலும் முசாஃபரும் 'பாக் சைபர் அட்டாக்கர்' என்ற பாகிஸ் தானை மையமாகக் கொண்ட இணையத்தள முடக்கக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது. ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, சந்தேகப் பேர்வழிகளைப் பிடிக்க டெல்லி போலிஸ் ஒரு சிறப்புப் படையை அமைத்தது. காஷ்மீரில் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலத் தில் மல்லாவும் ஹுசைனும் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இணையத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டாலும் 'விபிஎன்' தொழில்நுட்பம் மூலமாக விதி களை மீறி இணையத்தை நாடுவது எப்படி என்பது பற்றி காஷ்மீர் இளையர்களுக்கு மல்லா கற்பித்து வந்ததாகக் கூறப்பட்டது.