புதுப்பெண்ணைக் கொன்று கொள்ளை

புதுப்பெண்ணைக் கொன்று கொள்ளை

1 mins read

மீரட்: நெடுஞ்சாலையில் காரில் சென்ற புது மணப்பெண்ணை கணவன் கண்முன்னே சுட்டுக்கொன்று நகைகள், ரொக்கம், கார் என அனைத்தையும் ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது. சாஜேப்=ஃபர்ஹானா தம்பதி, தம் உறவினர்களுடன் சென்ற போது இன்னொரு காரில் வந்த நால்வர் கும்பல் அவர்களை வழிமறித்தது. ஃபர்ஹானா நகைகளைக் கழற்றித் தர மறுத்ததால் கும்பலில் ஒருவன் அவரைச் சுட்டு, காரில் இருந்து வெளியே இழுத்துப்போட்டதாகக் கூறப்படுகிறது.