தேர்வு எழுத கழுதைக்கு அனுமதி

1 mins read

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஈராண்டுகளுக்குமுன் பசு ஒன்றுக்கு தேர்வு அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்பட்ட நிலையில், அங்கு இன்று நடக்கவுள்ள வட்டாட்சியர் தேர்வெழுத ஒரு கழுதைக்கு 'ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டுள்ளது. கழுதை படத்துடன் கூடிய அந்த 'ஹால் டிக்கெட்' சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்துக் கேட்டதற்கு, அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.