சிறுமிகளுக்குப் பாலியல் கொடுமை; சமய போதகர்கள் இருவர் கைது

1 mins read

புதுடெல்லி: சந்தைக்குச் சென்ற பத்து வயது சிறுமியைக் கடத்தி, இஸ்லாமிய சமயப் பள்ளிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் அப்பள்ளியின் மௌல்வி கைது செய்யப்பட்டார். சிறுவன் ஒருவன் அக்குற்றத்தில் ஈடுபட்டதை அறிந்திருந்தும் அது பற்றி அவர் போலிசிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, 11 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறி ஆந்திராவைச் சேர்ந்த 38 வயது கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது.