திருட்டு: மந்திரவாதி உதவியை நாடிய போலிஸ்

திருட்டு: மந்திரவாதி உதவியை நாடிய போலிஸ்

2 mins read

புதுடெல்லி: பீகாரில் திருட்டுப் போன பொருட்களைக் கண்டு பிடிக்க ரயில்வே காவல் துறை யினர் (ஜிஆர்பி) மந்திரவாதி உதவியை நாடிய சம்பவம் பற்றி விசாரணை நடக்கிறது. பீகார் மாநிலத்தில் சிவான் ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ரவி ஸ்ரீவாத்சவா என்பவரின் வீட்டில் பத்து லட்சம் ரொக்கம் மற்றும் விலைமதிப்புள்ள சில பொருட்கள் திருட்டுப்போய்விட் டன. போலிசுக்கு எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் நந்த் கிஷோர், ரவி வீட்டுக்கு மீண்டும் விசா ரணை நடத்த காவலர்களோடும் அப்பகுதியைச் சேர்ந்த பிரபல மந்திரவாதியான 'கோரே பாபா' என்பவரோடும் சென்றார். வீட்டில் போலிஸ் அதிகாரியை விட மந்திரவாதிதான் ஸ்ரீவாத்சவா விடம் துருவித்துருவி விசா ரணை நடத்தினார்.

பிறகு சில நிமிடம் கண்களை மூடி தியானம் செய்த பாபா, திரு டர்களைப் பிடிக்க சில நடுநிசி சிறப்பு பூஜை செய்யவேண்டும் என்றும் இதற்காக மெயிர்வா எனும் இடத்தில் உள்ள தனது ஆசிரமத்துக்கு வருமாறும் ஸ்ரீவாத்சவாவை வலியுறுத்தினார். இதைக் கேட்டு அதிர்ந்த ஸ்ரீவாத்சவா, செய்தியாளர்களை அழைத்து நடந்த சம்பவத்தை விவரித்தார். திருட்டைக் கண்டு பிடிக்க மந்திரவாதி உதவியை போலிசார் நாடிய தகவல் மாநிலம் முழுவதிலும் பரவியது. சிவான் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும் ஸ்ரீவாத் சவா இது குறித்து புகார் மனு அனுப்பினார். திருட்டைக் கண்டு பிடிக்க அறிவியல் ரீதியிலான முறைகளைத் தவிர்த்து மந்திர வாதியின் உதவியை நாடிய ரயில்வே காவல் துறையினரை ஸ்ரீவாத்சவா கடுமையாகச் சாடி னார். தான் சந்தேகிக்கும் நபர் களைப் பிடித்து விசாரிக்காமல் மந்திரவாதியின் பூஜைக்குத் துணை போகும் ஜிஆர்பியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்ரீவாத்சவா வலியுறுத்தினார்.

இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை தடாலடி யாக உத்தரவிட்டது. உத்தரவைத் தொடர்ந்து சம்பந் தப்பட்ட போலிஸ் அதிகாரிகளை யும் மந்திரவாதியையும் விசாரிக் கும் முயற்சிகள் தொடங்கின. இதனிடையே, கோரே பாபாவின் சாபத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் அவர் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு ஸ்ரீவாத் சவாவை சிவான் நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.