புதுடெல்லி: மத்திய அரசின் 'தீனதயாள் உபாத்யாயா கிராம் ஜோதி' திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வகுத்த தீன தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ் கிராம மின்வசதிக்காக ரூ.75,893 கோடி ஒதுக்கப் பட்டதாகவும் முதற்கட்டமாக 18,452 கிராமங்கள் மின்வசதி பெற்றதாகவும் மத்திய அரசு அறிக்கை ஒன்றில் கூறியது. மின்வசதி பெறாமல் இருந்த மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள லீசாங் கிராமமும் இம்மாதம் 28ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் மின்வசதியைப் பெற்றது. இதன்மூலம், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
அனைத்து கிராமங்களும் மின்வசதியைப் பெற்றன
1 mins read

