குற்ற வழக்குகளில் 66 ஐபிஎஸ் அதிகாரிகள்

குற்ற வழக்குகளில் 66 ஐபிஎஸ் அதிகாரிகள்

1 mins read

லக்னோ: இந்தியாவில் ஐபிஎஸ் நிலை போலிஸ் அதிகாரிகள் 66 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிய வந்து இருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்த வரையில் ராஜஸ்தான் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் 13 அதிகாரிகள் இத்தகைய வழக்குகளை எதிர்நோக்குகிறார் கள் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. தமிழ்நாட்டில் எட்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக கிரி மினல் வழக்குகள் இருக்கின்றன. சமூக ஆர்வலர் ஒருவர் தொடுத்த கோரிக்கைக்கு அளித்த பதிலில் அமைச்சு இவற்றைத் தெரிவித்து உள்ளது.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகா ராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரி களுக்கு எதிராக இத்தகைய வழக்குகள் எதுவும் இல்லை. குஜராத்தில் 7 அதிகாரிகளும் யூனியன் வட்டாரங்களில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளும் மணிப்பூர், திரிபுரா ஆகிய சிறிய மாநிலங் களைச் சேர்ந்த நான்கு அதிகாரி களும் கிரிமினல் வழக்குகளை எதிர்நோக்கி இருக்கிறார்கள். திரு தாக்கூர் என்ற சமூக ஆர்வலர் அளித்துள்ள மனுவை விசாரித்து ஐபிஎஸ் அதிகாரி களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு விவரங்களை வெளியிடும் படி உள்துறை அமைச்சுக்கு மத்திய தகவல்துறை ஆணையர் அண்மையில் உத்தரவிட்டார்.