ராகுல்: மோடி வாக்குறுதிகள் எல்லாம் வெற்றுவேட்டுகள்

ராகுல்: மோடி வாக்குறுதிகள் எல்லாம் வெற்றுவேட்டுகள்

2 mins read
7bc1abff-6832-4cb9-a6db-8d31fdcde378
-

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்துவரும் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வேட்டுகள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குறைகூறியுள்ளார். நாடு முழுவதும் தான் சுற்றி வந்ததாகவும் பாஜக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் புதுடெல்லியில் 'மக்கள் கோப ஆவேசப் பேரணி' என்ற பெயரில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் நேற்று முழங்கினார். அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங் கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றார் ராகுல் காந்தி. "ரஃபேல் உடன்பாட்டைப் பிடுங்கி அனுபவமே இல்லாத தன் நண்பருக்குச் சொந்தமான தனி யார் நிறுவனத்திடம் மோடி ஒப் படைத்து இருக்கிறார்.

"வேலையின்மை உச்சத்துக்கு ஏறிவிட்டது. மோடி அறிமுகப்படுத் திய ஜிஎஸ்டி வரி தேசிய பொருளி யலைப் பாதித்துவிட்டது. மத்திய அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல், தனக்குத் தொடர்புடைய நிறுவனங்கள் நன்மையடையும்படி முடிவுகளை எடுத்து வருகிறார். "இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மோடி வாய் திறப்பதே இல்லை," என்று ராகுல் பேசினார்.

"மக்களின் பணம் நீரவ் மோடி போன்றோரின் பைகளில் உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள், பெண்களிடம் அடாவடித்தனம் செய்து வருகின்றனர். தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன," என்றாரவர். இதனிடையே, மக்கள் கோப ஆவேசப் பேரணியில் பேசிய காங் கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, நாட்டின் இளைஞர்களை யும் விவசாயிகளையும் பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்ட தாகக் குற்றம் சாட்டினார். சுதந்திரமான அமைப்புகளை பாஜக அரசு சிதைப்பதாகவும் இந்தியப் பொருளியலையே மோடி அரசு நாசம் செய்துவிட்டதாகவும் சோனியா காந்தி கடுமையாகச் சாடினார்.