திருநெல்வேலி: தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதவாத சக்திகள் மேற்கொள்ளும் முயற்சியை முறியடிப்போம் என்றும் திராவிட இயக்கங்களை அழிக்க முடியாது என்றும் கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "29 ஆண்டுகாலம் என்னை வார்த்தெடுத்த இயக்கம் திமுக. திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்," என்றார். ஞாயிற்றுக் கிழமை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாளையங்கோட்டைக்கு வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.
மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ
1 mins read

