தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற 'ஸ்டெர்லைட்' ஆலை போராட்டத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரி அங்குள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய போராட்டத்துக்கு பல அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று முன்தினம் 15வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் பேசிய சமுத்திரக்கனி, "ஸ்டெர்லைட் ஆலையை இங்கிருந்து துரத்த வேண்டும்," என்றார்.
மக்கள் போராட்டத்தில் சமுத்திரக்கனி. படம்: இந்திய ஊடகம்

