திமுக கூட்டணியில் திருப்பம்

திமுக கூட்டணியில் திருப்பம்

1 mins read

சென்னை: திமுக கூட்டணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அதன்படி காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிவிட்டு தமாகாவையும் சமகவையும் சேர்ப்பது குறித்து திமுக தலைமை திட்டமிட்டு வரு கிறது. இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி யின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாக வும் கூறப்படுகிறது.

முன்னதாக டெல்லியில் காங் கிரஸ் தலைவர் ராகுலைச் சந்தித்த பிறகு சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசரிடம் திமுக-காங்கிரஸ் கூட் டணி பற்றி கேட்டபோது, "தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி டெல்லி மேலிடம் முடிவு செய்யும்," என்று கூறியிருந்தார். இது, திமுகவினருக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட திமுக மாவட்ட செயலர்கள் விரும்பவில் லை என்பதால் காங்கிரசுக்கு பதில் தமாகாவை சேர்க்க திமுக தலைமை விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஏற்ப அண்மைய காலமாக ஸ்டாலினுடன் தமாகா தலைவர் வாசனும் சமக தலைவர் நடிகர் சரத்குமாரும் நெருக்கம் காட்டி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற, சட்ட மன்றத் தேர்தல்களில் திமுக கூட் டணியில் சேர தமாகா, சமக ஆகிய இரு கட்சிகளும் விரும்புகின்றன. அடுத்த மாதம் 6ஆம் தேதி காவிரி விவகாரம் தொடர் பாக அனைத்து விவசாயிகளும் சங்கங்களும் இணைந்து நடத்தும் ஈரோடு மாநாட்டில் ஸ்டாலினுடன் வாசனும் பங்கேற்கிறார்.