சென்னை: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தைச் சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்ததாகவும் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக் குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என ஆளுநரை அவர் கள் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் ஆறு வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. எனினும், மத்திய அரசு அந்த உத்தரவைச் செயல் படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவில் குறிப் பிடப்பட்டிருந்த 'ஸ்கீம்' என்றால் என்ன? என விளக்கம் கேட்டு மத்திய அரசும் உச்ச நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்தது. மறுபக்கம் தமிழக அரசு கடும் அதிருப்தி காரணமாக மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. தமிழக அரசின் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளு நரைச் சந்தித்துள்ளார் தமிழக முதல்வர்.

