சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பி னரும் போராடி வரும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்துள் ளது. இதற்குப் பல்வேறு தரப் பில் இருந்தும் கண்டனம் எழுந் துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதே உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அண்மைய உத்தரவு. இதைய டுத்து 815 மதுக்கடைகளை மூடவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடை களை மூடும்படி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடு விழா கண்டன.
எனினும் மாநகராட்சி, நக ராட்சிகளுக்குட்பட்ட தேசிய மற் றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவித் தது தமிழக அரசு. இதையடுத்து மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட் டன. சில கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள் ளாட்சி சாலைகளாக அறிவிக் கப்படாத இடங்களில் செயல் படும் மதுக்கடைகளை மீண்டும் மூட உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.

