சென்னை: லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிஸ் என்று கூறி பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவிடம் பணம் பறிக்க முயன்றவருக்கு வலைவீசப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் எம்எல்ஏ இ.கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், தம்மை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர், எம்எல்ஏ வீட்டில் சோதனை நடத்த இருப்பதாகவும் அந்நடவடிக்கையைக் கைவிட வேண்டுமானால் தமக்குப் பணம் தரவேண்டும் எனவும் அவர் மிரட்டியுள்ளார்.
குறிப்பிட்ட ஓர் உணவகத்துக்கு வந்து பணத்தை ஒப்படைக்குமாறு மர்ம நபர் கூற, எம்எல்ஏ தரப்பில் வேறொரு இடத்துக்கு வருமாறு கூறியுள்ளனர். எனினும், மர்ம நபரிடம் அவர் கேட்ட தொகையை எம்எல்ஏ தரப்பு தரவில்லை. இதையடுத்து அந்நபர் சட்டென கிளம்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து எம்எல்ஏ கருணாநிதி போலிசில் புகார் அளித்துள்ளார்.

