காவல்துறையினர் தடியடி; திருப்பூரில் கூட்டுறவு சங்கத் தேர்தல் ரத்து

1 mins read
b19cddab-4785-4074-b923-f1f32f36d112
-

திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தேர்தல் நடை பெறுகிறது. இதையொட்டி அதிமுகவினருக்கு மட்டுமே விருப்ப மனு வழங்கப் பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சங்கத்துக்கு வெளியே நேற்று முன்தினம் அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட, போலிசார் தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, போலிசார் தடியடி நடத்தினர். விரும்ப மனு வாங்க வரிசையில் நின்றோரைத் தவிர மற்றவர்களை போலிசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதையடுத்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. படம்: தமிழக தகவல் ஊடகம்