'எஸ்வி சேகருக்கு ஆதரவாக இருக்கிறது தமிழக அரசு'

1 mins read

பலவீனமான ஆட்சியே நடக்கிறது: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு நாகர்கோவில்: பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.வி.சேகரைக் கண்டித்து போராட்டம் நடத்திய செய்தியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார். "முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தால் எதுவும் நடக்காது. அதிமுக அரசு திறனற்ற நிலையில் உள்ளது. "முதல்வரும், துணை முதல்வரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, மாநில நலனுக்காக எந்த திட்டத்தையும் நிதியையும் பெறவில்லை," என்றார் பாலகிருஷ்ணன்.