கல்லூரி விழாக்களில் அரசியல் பேச அரசு தடை

கல்லூரி விழாக்களில் அரசியல் பேச அரசு தடை

1 mins read

சென்னை: தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநர் முனைவர் ஜெ. மஞ்சுளா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவானது, நடிகர் கமல் தரப்புக்கு விதித்துள்ள மறைமுகத் தடை என விமர்சனம் எழுந்துள்ளது. இனி தமிழகக் கல்லூரி களில் நடக்கும் விழாக்க ளில் பங்கேற்கும் விருந்தி னர்கள் அரசியல் பேச கூடாது என்று முனைவர் மஞ்சுளாவின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைய காலமாக கல்லூரி விழா, நிகழ்ச்சிக ளில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி சார்ந்த, இயக்கம் சார்ந்த கொள்கைகளைப் பேசுவ தாக அரசுக்குத் தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் இப்படிப் பேசுவது அவர்களின் படிப்பை, ஆராய்ச்சியைப் பாதிக்கும் என்றும், கல்லூரிக்கு இடையூறாக அமையும் என்றும் மஞ்சுளா குறிப்பிட்டுள்ளார். எனவே, கல்லூரிகளில் இனி நடக்கும் விழாக்களில் கலந்துகொள்ளும் விருந்தி னர்கள் அரசியல் பேசக் கூடாது என்று கல்வி இயக் குநர் உத்தரவிட்டுள்ளார். "விருந்தினர்கள் அரசி யல் பேசும் விழாக்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் அனுமதி அளிக்கக்கூடாது. விருந்தினர்கள் அரசியல் பேசியது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மஞ்சுளா தமது உத்தரவில் கூறியுள்ளார்.