கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்

1 mins read
96d01c29-f661-4670-921c-9d608be5d98a
-

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சில இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை மன்றத் தொகுதிக்கு உட்பட்ட தத்தனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அவர் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். படம்: தகவல் ஊடகம்