எஸ்.வி.சேகரைக் கைது செய்யாத போலிசுக்கு நீதிமன்றம் கண்டனம்

எஸ்.வி.சேகரைக் கைது செய்யாத போலிசுக்கு நீதிமன்றம் கண்டனம்

1 mins read
610f8ef5-5a5e-4de7-988d-997fbbec9b0d
-

சென்னை: பெண் செய்தியாளர்கள் குறித்து ஆபாசக் கருத்து வெளி யிட்ட எஸ்.வி.சேகரை காவல் துறை இதுவரை கைது செய்யா தது குறித்து உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமக்கு முன்பிணை கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்பிணை மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம். அண்மையில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் செய்தியாளர்கள் பற்றி வரிக்கு வரி தரக்குறைவாக பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு ஊடகத்துறை யினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் பதிவை படிக் காமல் பகிர்ந்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டதோடு, அந்தப் பதிவையும் தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கினார். இருப்பினும் அவரது வீட்டு முன்பு செய்தியாளர்கள் முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தினர். அவருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், காவல் துறையிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மத் திய குற்றப்பிரிவு போலிசார் எஸ்.வி.சேகர் மீது பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவானார் எஸ்.வி.சேகர். தமக்கு முன்பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்.