மத்திய அமைச்சரின் கார் மீது தாக்குதல்

மத்திய அமைச்சரின் கார் மீது தாக்குதல்

1 mins read

பரமக்குடி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார் மீது காலணிகள், கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்கள் மீது வழக்குப் பதிவானது. நேற்று முன்தினம், பரமக்குடி அருகே மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த வந்தபோது மத்திய அமைச்சருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டினர். அப்போது திடீரென அவரது காரை நோக்கி காலணிகளும் கற்களும் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.