கல்விக் கழகங்களில் அரசியல் பேசக்கூடாது: தமிழக அரசு உத்தரவு

கல்விக் கழகங்களில் அரசியல் பேசக்கூடாது: தமிழக அரசு உத்தரவு

1 mins read

சென்னை: கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என்ற உத்தர வையடுத்து, தமிழக கல்வித்துறை அரசுப் பள்ளிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிகளில் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகளை அறிவித்துள்ள கல்வித்துறை, அவற்றை மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி மாணவர்கள் பள்ளிக்கு கைபேசி எடுத்து வரக்கூடாது, அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும், கை, கால் நகங்கள், தலைமுடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும், மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும் என பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.