சென்னை: சென்னையில் சிலர் கடத்தல் தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மண்ணடி பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர வாகனத் தில் அங்கு சுற்றித்திரிந்த இளை யரை மடக்கி விசாரித்தபோது, அவர் வைத்திருந்த பையில் 12 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவர் தங்கியிருந்த விடுதியில் சோதனையிட்டபோது, அங்குள்ள இரு இளையர்களிடம் இருந்து மேலும் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இக்கடத்தலில் தொடர்புடைய ஒரு பெண்ணும், மற்றொரு ஆட வரும் போலிசாரிடம் பிடிபட்டுள் ளனர்.

