சென்னை: தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ள னர். மதுவுக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாததால் குடும்பம் சீரழிவதை சகித்துக் கொள்ள முடியாமல், தினேஷ் என்ற மாணவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதை யடுத்து முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களைச் சேர்ந்தவர்களால் நடத்தப் படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளையரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டு விடும் என்று வெட்டி வாதங்களைப் பேசுவது பலனளிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நலனில் மட்டும் அக் கறை செலுத்த வேண்டிய தமிழக அரசு, வருவாயை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூடா மல் இருப்பது கண்டிக்கத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். "மது ஒழிப்பு குறித்த தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர்கள் களத்தில் நின்று போராட வேண்டும். அப்போது தான் நிரந்தர தீர்வைப் பெற முடி யும்," என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

