பாதுகாப்புத்துறைக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியா 5வது இடம்

பாதுகாப்புத்துறைக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியா 5வது இடம்

1 mins read

புதுடெல்லி: உலக அளவில் பாதுகாப்புத்துறைக்காக அதிகம் செலவிடும் முதல் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக அனைத்துலக ஆய்வு அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், பிரான்சை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறைக்காக 5.5% இந்தியா கூடுதல் செலவு செய்திருந்தாலும், நவீன ரக கருவிகள் வாங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.