புதுடெல்லி: தமிழகத்திற்குப் போதுமான அளவு மழையில்லாத காரணத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தைக் குறைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறி ஞர் ஜெய்சுகின் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள் ளார். அதில், தென்மேற்குப் பருவ மழை இந்தியா முழுவதும் பெய்தாலும் தமிழகத்துக்கு அந்த மழையால் எந்தப் பலனும் கிடைப்ப தில்லை. இதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான். தென்மேற்குப் பருவ மழைக் கான மேகங்கள், தமிழகத்துக்குள் நுழைய விடாமல் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப் படுகின்றன. இதனால் மற்ற மாநிலங்களைப்போல தென் மேற்குப் பருவ மழை தமிழகத் துக்குப் பயனளிப்பதில்லை.
மேலும் மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப் படுவதால், தென்மேற்குப் பருவ மழையானது கேரளாவிற்கு அதிக மழைப்பொழிவைக் கொடுப்பதோடு, 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே இதற்கு காரணமான மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தைக் குறைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தைக் குறைத்தால், தென் மேற்குப் பருவமழை தமிழகத்துக் கும் நல்ல பலனைக் கொடுக்கும். இதனால் தமிழகம் தண்ணீருக் காக பிற மாநிலங்களை எதிர் பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.

