'மகனை இழந்த நான் இனி மதுவைத் தொடமாட்டேன்'

'மகனை இழந்த நான் இனி மதுவைத் தொடமாட்டேன்'

1 mins read

நெல்லை: நெல்லை மாவட் டத்தைச் சேர்ந்த தினேஷ் நல்ல சிவன் என்னும் மாணவர் அண் மையில் தமது உயிரை மாய்த்துக் கொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தைக் கைவிட மறுத்ததால்தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தினே‌ஷின் உடல் நேற்று முன்தினம் அடக் கம் செய்யப்பட்டது. அப்போது, அவரின் தந்தை மாடசாமி கதறி அழுதார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது மகன் எவ்வளவு கெஞ்சியும் நான் குடிப்பழக்கத்தை விடவில்லை. "அதனால், மருத்துவர் ஆக ஆசைப்பட்ட அவனை இழந்து விட்டேன். அவன் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. அவன் ஆசைப்பட்டபடி இனி மேல் நான் குடிக்கமாட்டேன். என் நிலைமையைப் பார்த்து மது அருந்துபவர்கள் திருந்தவேண் டும். குடும்பத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வரவேண் டும்," என்றார்.