கோவை: குட்காவைத் தமிழகத்தில் விற்பதற்கு லஞ்சம் வாங்கியதை விட வேறு மானக்கேடு தமிழ்நாட் டுக்கு வந்துவிடப்போவதில்லை என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில், கோவை மாவட் டம் சூலூர்=கண்ணம்பாளையத் தில் இயங்கி வந்த குட்கா ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக நிர்வாகிகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்காகத் திரண்டி ருந்த கூட்டத்தினரிடையே ஸ்டா லின் பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில், "கடந்த ஆண்டு மாதவரத்தில் நடத்தப்பட்ட சோத னையின்போது கைப்பற்றப்பட்ட குட்கா டைரியில் குட்கா விற்பனை யில் யார் யார் சம்பந்தப்பட்டிருந்தார் கள், யார் யாருக்கு எவ்வளவு கோடி ரூபாய் மாமுல் வழங்கப் பட்டது என்பது குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த புதன்கிழமை கோவை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

