மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி பகுதியிலுள்ள இரண்டு மாடி குடியிருப்புக் கட்டடம் நேற்று முன்தினம் இரவு திடீரென குலுங்கியது. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். குலுங்கிய கட்டடம் அரை அடி பள்ளத் தில் உள்வாங்கி ஒரு பக்கம் சற்று சாய்ந்த நிலையில் இருந்தது. உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வரு கிறார்கள். வயல்வெளியில் கட்டப்பட்டதாலும் சரியான அடித் தளம் அமைக்காததாலும் கட்டடம் உள்வாங்கியதாகத் தெரிய வந்துள்ளது.
கட்டடம் ஒருபக்கமாகச் சாய்ந்தது
1 mins read

