பேருந்துகளில் நூதன திருட்டு; உறவினருடன் பெண் கைது

பேருந்துகளில் நூதன திருட்டு; உறவினருடன் பெண் கைது

1 mins read

சென்னை: பேருந்தில் கைக் குழந்தையுடன் பயணம் செய்வது போல நடித்து பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிய பெண் உட்பட 2 பேரை போலிசார் கைது செய்து 42 சவரன் தங்க நகை களைப் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட இருவரும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரதி (32) என்பதும் உடன் வந்தவர் அவரது தங்கையின் கணவர் பிரபாகர் (30) என்பதும் தெரியவந் தது. ரதி இவ்வாறு குழந்தையுடன் பேருந்தில் பயணம் செய்து, பெண் களின் பர்ஸ் மற்றும் கைப்பையைத் திறந்து நகைகள் மற்றும் பணத்தைத் திருடி வந்துள்ளார்.

தங்கையின் கணவர் பிரபா கரும் இவருடன் பேருந்தில் பயணம் செய்து திருடிய பொருட்களை உடனுக்குடன் கைமாற்றி எடுத்துச் சென்று தப்பி வந்ததும் தெரியவந்தது.