அதிபர்: இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது

அதிபர்: இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது

1 mins read

வேலூர்: இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரு நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றுக் காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில், அதிபர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். வேலூர் சிம்.எம்.சி.மருத்துவமனை நூற்றாண்டுவிழாவில் கலந்துகொண்டு அதிபர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், "சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னுதாரண மாக உள்ளது. "இந்தியாவில் கடந்த நான்காண்டுகளில் 20 விழுக்காடு மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறை என்பது சேவையாக இருக்கவேண்டுமே தவிர வணிகம் சார்ந்ததாக இருக்கக்கூடாது," என்றார்.