இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அணிதிரட்டும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன் னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே இருப்பதால் எதிர்த்தரப் பினர் வேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியைத் தோற்று விக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண் மையில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்த துடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடனும் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு மேற்கு வங்கம் சென்ற திரு ராவ், முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்தார். மம்தா பாஜகவுக்கு எதிர்ப்பானவர், காங் கிரசுக்கு எதிரி அல்ல என்பதை அப்போது அவர் உணர்ந்துகொண் டார். ஸ்டாலினும் ராவிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதன் பிறகு மூன்றாம் அணி என்னும் வார்த்தையை ராவ் பயன் படுத்தவில்லை.

