கமல்: தமிழக அரசியல் களம் இழந்த மாண்பை மீட்க வேண்டும்

1 mins read
2bfc486e-33a4-4aad-86e4-34ac93a50308
-

சென்னை: தமிழக அரசியல் களம் இழந்துவிட்ட மாண்பை மீட்டெடுக்கவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் தெரி வித்துள்ளார். சென்னையில் நேற்று இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், வணிகர் கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். தேவையின்றி கடையடைப்பு செய்யப்போவதில்லை என்று வணிகர்கள் அறிவித்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், மக்களுக்கு இடையூறு ஏதுமின்றி போராட்டங்களை நடத்த வேண் டும் என வலியுறுத்தினார்.