பெரம்பலூரில் பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

பெரம்பலூரில் பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

1 mins read
7afe1431-2cc9-44da-a368-dcae753a1866
-

பெரம்பலூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்படாததைக் கண்டித்து, பாலை தரையில் கொட்டி, உற்பத் தியாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். அங்குள்ள லாடபுரம் கிராமத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் உள்ளது.

இச்சங்கத்துக்கான தேர்தலில் போட்டியிடுவோரின் பட்டியலை அதிகாரிகள் வெளியிடவில்லை. இதனால் தேர்தல் அலுவலர்கள் ஆளும் கட்சியினருக்கு ஆதர வாகச் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் 30 பேர், 100 லிட்டர் பாலை, கூட்டு றவு சங்கத்திற்கு தராமல், தரை யில் ஊற்றி போராட்டத்தில் ஈடு பட்டனர். படம்: ஊடகம்