தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீட்; கேரளாவில் அவதிக்கு ஆளான தமிழக மாணவர்கள்

1 mins read
e6dfdb78-6bd1-49c0-9d6a-508f9a577443
-

சென்னை: 'நீட்' தேர்வு எழுது வதற்காக கேரளா சென்றுள்ள தமிழக மாணவ, மாணவியர் பல் வேறு சிரமங்களை எதிர்கொண்ட தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேர்வு மையம் எங்குள்ளது என்று தெரியாமலும், குறைந்த கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் கிடைக்காமலும் தாங்கள் அவதிப் பட்டதாக மாணவர்கள் தெரி வித்துள்ளனர்.

இந்த ஆண்டு 'நீட்' தேர் வுக்காக கேரள மாநிலத்தில் மட் டும் 58 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவற்றில் 33 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 3 ஆயிரம் மாண வர்கள் தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மாநிலத்தில் தேர்வு எழுத முடியாமல் வேறு மாநிலங் களுக்குச் சென்று 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இத னால் மாணவர்கள் தேர்வில் தங்களது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த இயலாமல் போகும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எர்ணாகுளம் சென்ற தமிழக மாணவர்கள். படம்: ஊடகம்