பயணப் பெட்டி சக்கரத்தில் தங்கக் கட்டிகள்

பயணப் பெட்டி சக்கரத்தில் தங்கக் கட்டிகள்

1 mins read
f567bbe7-11ff-43df-88b4-d807f854b1e8
-

புனே: ஒடிசா மாநில புவனேஷ்வர் நகரின் பிஜு பட்நாயக் அனைத் துலக விமான நிலையத்தில் பயணப்பெட்டி சக்கரத்தில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வழக்கமான சோதனையில் ஈடுபட்ட அதி காரிகள், பயணி ஒருவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து அவரது கைப் பெட்டியை அதிகாரிகள் சோதனை யிட்டனர். அப்போது பயணப் பெட்டியின் சக்கரங்களில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்த முயற்சி செய்ததை காவல்துறை யினர் கண்டுபிடித்தனர்.

கைப்பெட்டி சக்கரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட தங்கம். படம்: இந்திய ஊடகம்