பெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு மதிப்பெண்

1 mins read

பெங்களூரு: கர்நாடக மாநிலத் திலுள்ள முதன்மை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளின் கூட் டமைப்பு ஒன்று பெற்றோர் வாக் களித்தால் அவர்களின் பிள்ளை களுக்குக் கூடுதல் மதிப்பெண் கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த அமைப் பின் பொதுச்செயலாளர் சா‌ஷி குமார் கூறுகையில், "2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இதைச் செய்ய முயன்றோம். ஒருசில பள்ளிகள் இதற்குச் சம்மதிக்காததால் நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை எங்கள் அமைப்பின்கீழ் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் இதைச் செயல் படுத்தச் சொல்லியிருக்கிறோம்.

"வாக்குப்பதிவு நாளில் பெரும்பாலான பெற்றோர்கள் விடுமுறையைக் கொண்டாடச் சென்றுவிடுகின்றனர். இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை இது," என்றார் அவர். "தேர்தலில் வாக்களித்து விட்டு தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு வந்து கையில் இருக்கும் 'மை'யைக் காட்டிப் பதிவு செய்துகொள்ள லாம். தாய் மற்றும் தந்தை வாக்களித்தால் அடுத்த ஆண் டில் மாணவர்களுக்குக் கூடு தலாக 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இருவரில் ஒருவர் மட்டும் வாக்களித்தால், இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் சா‌ஷிகுமார் கூறினார்.