நீலகிரி: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறை வேற்றுவது இல்லை என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டினார். குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்கு எதிரான நிலை மாறினால்தான் இந்தியாவில் விவசாயம் செழிக்கும் என்றார். "மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மத்திய அரசு இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஆண் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. எனவே இந்த விதையை தடை செய்ய வேண்டும்," என்றார் அய்யாக்கண்ணு.
கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசு: அய்யாக்கண்ணு புகார்
1 mins read

